எஸ்.பி. கேர் கோவிட தடுப்பூசி இன்று தொடங்கியது!

தனியார் கிளினிக்குகளின் வழியாக கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று தொடங்கியது ரவாங் மற்றும் உலு சிலாங்கூர் பகுதியில் பிரசித்தி பெற்ற தனியார் கிளினிக்குகள் வாயிலாக இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்கியது எஸ். பி கேர் குழுமத்திற்கு சொந்தமான நான்கு கிளினிக்குகளில் நேற்று 12:00 மணி தொடங்கி மாலை 6 மணி வரை கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்தது. புக்கிட் காசிங், பாத்தாங் காலி, அந்தர காப்பி ஆகிய கிளினிக்குகளில் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்த அனைத்து கிளினிக்குகளிலும் தல 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று எஸ். பி கேர் குடும்பத்தலைவர் டாக்டர் சத்யபிரகாஷ் தெரிவித்தார். பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைக்கு கடுமையான எஸ் பி வழங்கப்பட்டிருக்கிறது அதை தவறாமல் பின்பற்றி இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.



Message Us on WhatsApp