தமிழ் மலர் பணியாளர்களுக்கு கோவிட் -19 பரிசோதனை

தற்போது உலகையோ மிரட்டி வரும் கோவிட் -19 நோய்த் தொற்றால் எல்லாமே ஸ்தம்பித்துப் போய் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ் மலர் பணியாளர்களுக்கு எஸ். பி. கேர் நிறுவனம் பரிசோதனையை மேற்கொண்டது. ஏறக்குறைய 30 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனை காலத்தின் கட்டாயம் என பத்திரிகை துறையில் நீண்ட காலம் பணியாற்றிய வரும் கா.மணியம் தெரிவித்தார். இந்த பரிசோதனை செய்து கொண்டவர்களில் 5 பேர் தடுப்பூசியை ஏற்கெனவே போட்டுக் கொண்டனர். எஞ்சிய பணியாளர்களுக்கு தடுப்பூசி
போடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய காலக்கட்டத்தில் தடுப்பூசி போடுவது மிக அவியமானது என தமிழ் மலர் ஆசிரியர் பி. முனியாண்டி தெரிவித்தார்.



Message Us on WhatsApp